டிரம்ப் புட்டின் சந்திப்பு பயனுள்ளதாக நிறைவு பெற்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றள.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோரக்கு இடையேயான சந்திப்பு “மிகவும் பயனுள்ளதாக” முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள், வர்த்தக உறவுகள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்ததாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.
இந்த விவாதங்களின் விளைவாக, அடுத்த வாரம் இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே ஒரு உயர்மட்ட சந்திப்பை நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
