எனது வழியில் அரசு பயணிப்பதில் மகிழ்ச்சி

எனது வழியில் அரசு பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

கஸினோவைத் திறந்துவைக்கவும் கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதியளிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் உண்மையில் இவற்றைத் தாம் முன்மொழிந்ததாகவும் டயானா கமகே கூறினார்.

அப்போது தாம் முன்மொழிந்த நேரத்தில் அனுர குமார திசாநாயக்க எல்லோரும் எதிர்க் கட்சியில் இருந்துகொண்டு எதிர்த்தார்கள். இப்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதனை நிறைவேற்றுவது மகிழ்ச்சி.

இவ்வாறு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குத் திருமதி டயானா கூறியுள்ளார்.