ஓய்வூதிய போராட்டத்தில் இணையும் கரு ஜயசூரிய, அரசாங்கத்தின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இரண்டு முறை சிந்தித்துப் பார்க்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தால், முன்னாள் உறுப்பினர்களும் அவர்களில் தங்கிவாழும் 390 பேரும் பயன்பெறுவதாகக் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சிலரைத் தவிர அநேகமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாழ்க்கை ஓய்வூதியக் கொடுப்பனவில் பிணைக்கப்பட்டிருப்பதாகவும் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று கட்சித் தலைவர்கள் நால்வர் இந்த ஓய்வூதியத்தை நம்பியே வாழ்க்கை நடத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

