மகிந்தவுக்கு வீடு வழங்க தேரர்கள் தயார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு வீடு வழங்க தேரர்கள் தயார் என்று தம்மிடம் அறிவித்திருப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் சிறப்புரிமைகள் சலுகைகள் இல்லாமலாக்கப்பட்டால், அவருக்கு வீடொன்றைப் பெற்றுக்கொடுக்க மகா சங்கத்தினர் சிலர் முன்வரத்தயார் என்று தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை இரத்துச்செய்யும் சட்டமூலத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. இந்தச் சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்படும் சாத்தியம் உள்ளது.

எனவே, அவ்வாறான ஒரு நிலை வந்தால், மகிந்த ராஜபக்‌ஷவுக்கு வீடு வழங்க பௌத்த தேரர்கள் தயாராக இருப்பதாகப் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.