செவ்வாய்க் கிழமை வெப்பம் அதிகரிக்கும்!

செவ்வாய்க் கிழமை வெப்பம் அதிகரிக்கும்!: கிழக்கு, வடக்கு, வடமேல், வடமத்திய ஆகிய மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நாளை செவ்வாய் (06) வெப்பத்தின் அளவு, மனித உடலால் உணரப்படும் அளவிற்கு “எச்சரிக்கை” மட்டத்தில் இருக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, அந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.