தீபத்திருநாளாம் தீபாவளியை வரவேற்கும் வகையில் சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் மட்டக்களப்பு மாநகர சபையினால் ஒளியூட்டும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது
மட்டக்களப்பின் பிரசித்திபெற்ற கல்லடி பாலத்தினை ஒளியூட்டி திறந்துவைக்கும் நிகழ்ச்சி நேற்று 05.11.2026 மாலை மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் இடம் .

தமிழ்நாட்டின் சென்னை முன்னாள் ஆளுநர் எஸ்.சரவணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இதனை திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் E.ஸ்ரீநாத் மாநகரசபையின் பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார்,மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் தனஞ்செயன்,மாநகரசபை உறுப்பினர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்லடி புதிய பாலத்தில் இரண்டு பகுதிகளிலும் அமைக்கப்பட்ட அலங்கார மின் வளைவு ஒளியூட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. இதனை பெருமளான கண்டுகளித்தனர்.
எஸ்.வராதராஜன்
