மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் வெளியிடப்பட்டுள்ள மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 3 மாவட்டங்களிலுள்ள 10 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களின் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னெச்சரிக்கை அறிவித்தல் நாளை (25) மாலை 4 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:

இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத்தை, குருவிட்டை,இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும்;

கேகாலை மாவட்டத்தில் மாவனல்லை, தெரணியகலை, ருவான்வெல்லை, தெஹிஓவிட்டை, அரநாயக்கா ஆகிய பிரிவுகளுக்கும்;

நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவை,நோர்வூட் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:

பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தளை, ஹல்தும்முல்லை, பசறை, ஹாலிஎலை, ஊவா பரணகமை;

கொழும்பு மாவட்டத்தில் பாதுக்கை,சீதாவாக்கை;

களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை, மத்துகமை;

கண்டி மாவட்டத்தில் யட்டிநுவரை, உடுநுவரை, உடுதும்பரை, தெல்தோட்டை, தொலுவை, மினிப்பே, உடபலாத்தை, குண்டசாலை,மெததும்பரை.

மேலும், கேகாலை மாவட்டத்தில் புளத்கொஹுபிட்டி, எட்டியாந்தோட்டை,வரகாப்பொலை;

குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகமை, இப்பாகமுவை, ரிதிகமை, கணேவத்தை;

மொனராகலை மாவட்டத்தில் மெதகமை;

நுவரெலியா மாவட்டத்தில் மதுரட்டை, வலப்பனை, ஹங்குராங்கெத்தை, நில்தண்டாஹின்னை, கொத்மலை கிழக்கு,கொத்மலை மேற்கு;

இரத்தினபுரி மாவட்டத்தில் அயகமை, எஹலியகொடை, வெலிகேபொலை, கலவானை, இம்புல்பே, நிவித்திகலை, கொலொன்னை, பலாங்கொடை, கொடகவெலை, கஹவத்தை, ஓப்பநாயக்கா,பெல்மதுளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மழைவீழ்ச்சி நிலவரம்,ஆபத்துக்கான அறிகுறிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.