வங்கக் கடலில் இன்று (அக். 23) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ந்து வருகிற அக். 26 ஆம் மேற்கு – மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்பு அதிகம் என்றும் பின்னர் வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதியில் புயல் கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவானால் வங்கதேசம் பரிந்துரைத்துள்ள ‘அர்னாப்’ என்ற பெயர் சூட்டப்படும். இது இந்த ஆண்டின் முதல் புயலாக இருக்கக் கூடும்.
ஏற்கெனவே, அக். 21 அன்று தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கரள பகுதிகளில் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
