October 21, 2026 12:24 am
அஹுங்கல்லை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!

மொரட்டுவை – சொய்சாபுரம் பகுதியில் ஓட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் .

இன்று (20) இரவு 8.20 அளவில் காரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

ஹோட்டல் ஒன்றில் இருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் அந்த ஹோட்டலின் உரிமையாளர் எனத் தெரியவருகிறது. அவர் களுபோவிலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய இருவரும் பிலியந்தலை செல்லும் வழியில் அவர்களின் கார் பழுதானதால், வானத்தை நோக்கிச் சுட்டுவிட்டு ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.