அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்து!

கல்முனை அனோஜன் சிவராசாவுக்கு சவூதி அரேபிய மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனைத் தீர்ப்பை, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தத் தகவலை, மேன்முறையீடு செய்வதற்காக சவூதி அரேபிய சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா தரப்பினர் உறுதிசெய்துள்ளனர்.