அனோஜனின் மேன்முறையீடு சவூதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்!

அனோஜன் சிவராசா சார்பில் மேன்முறையீட்டு மனு சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் இன்று (11) தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2026 அக்டோபர் 11 அன்று தாக்கல் செய்யப்படவுள்ள உச்ச நீதிமன்ற மேன்முறையீட்டு மனுவை, இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட்,சவூதி சட்டக் குழுவினருடன் கலந்தாலோசித்து, இலங்கையின் நிபுணத்துவம் வாய்ந்த சட்டக் குழுவினர் இறுதி செய்தனர்.

இந்த மனு சவூதி நீதிமன்ற முறைமைக்கு அமைய உச்ச நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக, சவூதி சென்றுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் ஊடகப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, ரியாத்திலிருந்து இன்று நாடு திரும்பவிருந்தபோதிலும், விமான நிலையத்தின் மீதான தாக்குதலால், அவர்களின் பயணத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

அஷ்ரஃப் மாஃபிர்