பனாமா நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிக்கு அருகில் 7.7 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, இந்த நிலநடுக்கம் நேற்று (9) கடல் மட்டத்திற்கு கீழே சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் 8.0 மெக்னிடியூட் என கணிக்கப்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தீவிரம், பின்னர் 7.7 மெக்னிடியூட் ஆக பதிவாகியது.
பனாமா பகுதியில் உடனடி சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், அங்குள்ள மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறும் காட்சிகளைத் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் காட்டியுள்ளன.
இதனிடையே, மத்திய அமெரிக்காவின் பசுபிக் கடற்கரைப் பகுதிகள் மற்றும் கொலம்பியா, ஈக்வடோர் ஆகிய நாடுகளுக்கு நிலநடுக்கம் காரணமாக ஆழிப்பேரலை அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று அமெரிக்க ஆழிப்பேரலை எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
பனாமா தலைநகர் பனாமா நகர் மற்றும் அண்டை நாடான கோஸ்டாரிகாவின் தலைநகரிலும் உணரப்பட்டுள்ளது.
