பூஸ்ஸ சிறையில் கைதி அடித்துக்கொலை: பூஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.
கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் இவ்வாறு அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த கைதியோடு அதே அறையிலிருந்த வேறு சில கைதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் உயிரிழந்த கைதியின் சடலம் காலி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
பதினொரு இந்திய மீனவர்கள் விடுதலை

