திறப்பனை பஸ் விபத்தில் 14 பேர் காயம்!

கோப்புப் படம்

திறப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A09 வீதியில், நிகவரெட்டியிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து இன்று (07) அதிகாலை வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஆண்கள் 12 பெரும் பெண்கள் இருவரும் அடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். திறப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.