சாரதியிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

சாரதி ஒருவரிடம் ரூ.ஐயாயிரம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

சீதுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

வாகன விபத்தொன்றுடன் தொடர்புடையதாகக் பொறுப்பேற்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தை சட்ட நடவடிக்கை எதுவுமின்றி மீண்டும் ஒப்படைப்பதற்காக 5,000 ரூபாய் இலஞ்சமாகக் கோரிப் பெற்றமையினாலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.