நடுவானில் விமானத்தில் கத்திக் குத்துக்கு இலக்கானவர் இந்தியர்?

துபையில் இருந்து இஸ்ரேலுக்குப் புறப்பட்ட பயணிகள் விமானத்தில் சக விமானியின் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளான விமானி இந்தியர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு இன்று (செப். 30) காலை 174 பயணிகளுடன் புறப்பட்ட ஃபிளை துபை நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் நடுவழியில் சௌதி அரேபியாவின் தபூக் நகரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

நடுவானில் விமானம் பறந்துக்கொண்டிருந்தபோது அதை இயக்கிய விமானி ஒருவர் சக விமானியைக் கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்றதாகவும், அதை எதிர்த்து அவர் சண்டையிட்டதால் விமானம் வேகமாக கீழே சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வேறு இரண்டு விமானிகள் அந்த விமானத்தை இயக்கி சௌதியில் பத்திரமாகத் தரையிறக்கியுள்ளனர். மேலும், விமானி கத்தியால் குத்தித் தாக்கப்பட்டதில் அவர் விமானத்துக்குள் ரத்த வெள்ளத்தில் இருக்கும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இந்தத் தாக்குதலை நடத்திய விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் எனவும், தாக்குதலுக்குள்ளாகி அவரை எதிர்த்து சண்டையிட்டவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்மித் மச்சார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்துடன், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஃபிளைதுபை நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஸ்மித் மச்சார், தாக்குதல் நடைபெற்ற அந்த விமானத்தின் கேப்டனாக பதவி வகித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஏராளமான இஸ்ரேலியர்கள் பயணித்த அந்த விமானத்தை விபத்துக்குள்ளாக்க வேண்டுமென அந்த விமானி இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும், விமானியின் விவரம் உள்பட இந்தச் சம்பவம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

ஃபிளைதுபை விமானம் சௌதியில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து தாக்குதலில் பாதிக்கப்பட்ட விமானிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இஸ்ரேலியர்கள் பயணித்த அந்த விமானம் நடுவானில் ரேடாரில் இருந்து விலகியதால் கடத்தப்பட்டிருக்கக் கூடும் எனும் அச்சத்தில் இஸ்ரேலிய அரசு போர் விமானங்களை அனுப்பியதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.