மட்டக்களப்பு தேற்றாத்தீவு பாலமுருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற திருவிழா இன்று (18) நடைபெற்றது.
ஆலய உற்சவத்தை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை கழுதாவளை பிள்ளையார் ஆலயத்திலிருந்து கலாசார முறைப்படி எடுத்து வரப்பட்டது.






இன்று காலை வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு ஆலயத்தில் விசேட பூஜைகள் கிரியைகள் என்பன இடம் பெற்று கொடியேற்ற கம்பத்து அருகே கொடைச்சிலையும் முருகப்பெருமானம் எழுந்தருள பண்ணி ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ தேவ ராசா குருக்கள் தலைமையில் நண்பகல் சுப வேளையில் அடியார்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் கொடியேற்றம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது
ஆலயத்தின் விசேட திருவிழாக்களான திருவேட்டை திருவிழா 25.09.2026 அன்று இடம்பெற உள்ளத்துடன் மாம்பழ திருவிழா 29.09.2026 அன்று இடம்பெற உள்ளது தொடர்ந்து தீர்த்த திருவிழா 30.09.2026 அன்று மதியம் இடம்பெற உள்ளத்துடன் 01.10.2026 அன்று பூங்காவனத் திருவிழாவும் இடம்பெற்று இறுதியாக வைரவர் பூஜை உடன் இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவம் இனிதே நிறைவடைய உள்ளது
திருவிழாவை முன்னிட்டு தினசரி நண்பகள் அபிஷேகம் பூஜைகள் என்பன இடம் பெற்று உள்வீதி வளம் இடம் பெற உள்ளது இதேவேளை மாலை முருகப்பெருமானுக்கு விசேட அபிஷேகங்கள் இடம் பெற்று பூஜைகளைத் தொடர்ந்து சுவாமி உள் வீதி வெளி வீதி வலம் வருதல் இடம் பெற உள்ளது
இன்றைய கொடியேற்ற திருவிழாக்கு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து பெரும் அளவிலான முருக பக்த அடியார்கள் கலந்து எம்பெருமானின் அருளை பெற்றுச் சென்றனர்.
எஸ். வரதராஜன் மட்டக்களப்பு
