ஆப்கானுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா உலக சாதனை

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா உலக சாதனை படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா வெறும் 30 பந்துகளில் சதம் அடித்து அதிவேக சாதனையொன்றைப் படைத்துள்ளார்.

இதன்மூலம், இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் டி20 போட்டியில் பதிவு செய்த அதிவேக சதம் என்ற சாதனையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார்.

மேலும், முழு உறுப்பினர் (Full Member) அந்தஸ்து பெற்ற நாட்டுக்கு எதிராக ஒரு வீரர் பதிவு செய்த அதிவேக டி20 சர்வதேச சதம் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

எஸ். ஆர். இரவீந்திரன்