சீதுவையில் மாடியிலிருந்து தள்ளப்பட்டவர் உயிரிழந்துள்ளார்.
போதை தலைக்கேறியதால் ஏற்பட்ட தகராற்றில் மாடியிலிருந்து தள்ளப்பட்டவர் உயிரிழந்த சம்பவம் சீதுவையில் இடம்பெற்றுள்ளது.
ஹோட்டலின் மாடியில் மது அருந்திக்கொண்டிருந்த இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராற்றையடுத்து ஒருவர் மற்றையவரைக் கீழே தள்ளியதால், அவர் வீழ்ந்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் 49 வயது நபர் உயிரிழந்தார். அவரைத் தள்ளிவிட்டதாகச் சந்தேகிக்கப்படும் 41 வயது நபரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
