குறைந்த வருமானம் பெறும் மாணவர் களுக்கு ஊக்குவிப்புப் பணம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (15) நடைபெற்றது.
விபுலானந்தா புனர்வாழ்வுக்கழகத்தின் அனுசரணையில் ஊக்குவிப்புப் பணம் வழங்கப்பட்டது.
ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் அம்பாரை மாவட்ட விபுலானந்தா புனர்வாழ்வுக் கழகத்தின் அனுசரணையில் அம்பாரைமாவட்ட விபுலானந்தாப் புனர்வாழ்வுக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கான மாதாந்தம் ஊக்குவிப்புப் பணம் வழங்கும் நிகழ்வு அம்பாரை மாவட்ட விபுலானந்தாப் புனர்வாழ்வுக்கழகத்தின் தலைவர் கலாபூசணம் கா.சந்திரலிங்கம் தலைமையில் நேற்று (15) இடம்பெற்றது.


சம்மாந்துறை, பட்டிருப்பு, கல்முனை, திருக்கோவில் கல்வி வலயங்களில் கல்வி பயிலும் 40 மாணவர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபாய் வீதம் உயர்தரம் கற்றுமுடியும் வரை வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக சம்மாந்துறை கல்வி வலயத்தின் வலயக் கல்விப்பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், சிறப்பதிதியாக நாவிதன்வெளிப் பிரதேச சபையின் தவிசாளர் இ. ரூபசாந்தன், அம்பாரைமாவட்ட விபுலானந்தாப் புனர்வாழ்வுக் கழகத்தின் செயலாளர் இசைக்கலைமாணி கண. வரதராஜன், பொருளாளர் எம்.வித்தியானந்தன், உபதலைவர் ஓய்வுநிலை எந்திரி. தே. சர்வானந்தன், முன்னாள் தலைவர் மாதவன்பிள்ளை, ஓய்வு பெற்ற அதிபர்; எஸ். பூவேந்திரன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
சா. நடனசபேசன்
