கல்லடி கமநல சேவை நிலையத்தில் விற்பனை நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கல்லடி கமநல சேவை நிலையத்தில் விற்பனை நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரை அண்டிய விவசாயிகளின் நலன் கருதி புதிய விற்பனை நிலையத் திறப்பு விழா இன்று22.08.2026 சேவை நிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர் எம். பாயிஸ் தலைமையில் இடம் பெற்றது.

பிரதம அதிதியாக மாவட்ட கமநல அபிவிருத்தி நிலையத்தின் புதிதாக நியமனம் பெற்ற பிரதி பணிப்பாளர் எஸ். யோகராஜ் கலந்து கொண்டு, புதிய விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்து, விற்பனைப் பணிகளை உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு அபிவிருத்தி திட்டப்பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு எஸ். வரதராஜன்