ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரி புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் கனிஷ்ட பிரிவு மாணவர்களுக்கான புதிய கற்பித்தல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி, கல்லூரியின் அதிபர் எஸ். முரளிதரன் தலைமையில் இன்று காலை விசேட இறைவழிபாடுகளொடு நடைபெற்றது.



இந்நிகழ்ச்சிக்குப் பிரதம அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி நீலமாதவானந்தம், மட்டு வலய கல்விப் பணிப்பாளர் எஸ். ரவி கலந்து கொண்டு அடிக்கலினை நாட்டி வைத்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் துதிஷ்கரன், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வித் திணைக்கள பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
எஸ். வரதராஜன் மட்டக்களப்பு
