கார் ஓட்டும் பயிற்சியின்போது குளத்தில் பாய்ந்த கார் பெண்ணின் உயிரைப் பறித்தது.
காரோட்டும் பயற்சியின்போது கட்டுப்பாட்டை இழந்த கார் குளத்தில் வீழ்ந்து மூழ்கியதில் 42 வயது பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் கொல்கத்தாவில் இன்று புதன்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.
கொல்கத்தாவின் கெஸ்டோபூர் (Kestopur) பகுதியில் உள்ள பிரபுல்லா கானன் என்ற இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. சுமித்ரா தாஸ் என்ற அப்பெண், தனது மகளை ஸ்கூட்டரில் பள்ளியில் விட்டுவிட்டுத் திரும்பியிருந்ததாக அப்பகுதிவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, தனது காரை ‘கராஜி’லிருந்து வெளியே எடுத்து கார் ஓட்டப் பயிற்சி செய்யத் தொடங்கியபோது, அந்தக் கார் குளத்தில் பாய்ந்து மூழ்கியது.
அவரை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சுமித்ராவைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மீட்புப் பணிக்குப் பிறகு, தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் காரைக் குளத்திலிருந்து மீட்டனர்.
