பதற்றம் உருவான மஹரையிலிருந்து 104பேர் வேறு சிறைகளுக்கு மாற்றம்

மஹரையிலிருந்து 104பேர் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மஹரை சிறைச்சாலையிலிருந்து கைதிகள் 104 பேர் தும்பறை, வெலிக்கடை, பூஸா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு,பொலன்னறுவை உள்ளிட்ட பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹரை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, மஹரை சிறைச்சாலை கைதிகளைப் பார்வையிடுவதற்கான நேரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (04) க்குப் பின்னரே பார்வையாளர்கள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.