உயர் தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மாணவர்களின் மனுவை பரிசீலனையின்றியே மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப்பத்திர (உயர் தரப்) பரீட்சையை இரண்டு மாதங்களுக்குப் பிற்போடுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நீதிமன்றம் இன்று (23) நிராகரித்தது.
இவ்வருடம் பரீட்சைக்கு முதலாம்,இரண்டாம் தடவை தோற்றவுள்ள மாணவர் குழுவொன்று இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தது.
எஸ். ஆர். இரவீந்திரன்
