‘ஹவுஸ் ஒப் ஃபெஷன்ஸ்’ ஜவுளிக்கடை உரிமையாளர் கைது ஓர் அரசியல் பழிவாங்கலாகும் என்று எதிரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கா பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோருடன் தொடர்புடைய வர்த்தகர்கள் மாத்திரமே இலக்குவைக்கப்படுவதாகவும் ஆளுந்தரப்புக்குத் தொடர்புடையவர்களுக்குச் சுதந்திரமாக இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் திரு. தசநாயக்கா குறிப்பிட்டார்.
இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் மீது சுங்க வரி செலுத்தாமை தொடர்பாக ஹவுஸ் ஒப் ஃபெஷன் உரிமையாளர் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது.
