காலநிலை மாற்றங்களைக் கருத்திற் கொண்டு, நாட்டில் பாதுகாப்பான நெல் இருப்பை பராமரிப்பது அத்தியாவசியமானது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இஃது ஒரு சாதாரண நடைமுறையாக அன்றி, விசேட கவனத்திற்குரிய ஒரு விடயமாகப் பார்க்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுபோக நெல் கொள்வனவுத் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
அங்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த வருட சிறுபோகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் இருப்புக்கள் இன்னும் போதுமான அளவில் சந்தைக்கு விநியோகிக்கப்படாமை ஒரு பிரச்சினையாகும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த நெல் களஞ்சியசாலைகளை விடுவிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதற்கான முன்மொழிவுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்ட
