மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் வயல் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வேட்டைத் துப்பாக்கி ஒன்றுடன் பங்குடாவெளியைச் சேர்ந்த விவசாயி ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலையில் கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி. பி. பத்தும் குமாரா தலைமையிலான பொலிஸ் குழுவினர் வேப்பவெட்டுவான் வயல் பகுதியில் வேர்க்கடலை பயிர் செய்கையில் ஈடுபட்டுவரும் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வேட்டைத் துப்பாக்கி ஒன்றை (ஷொட்கன்) மீட்டதுடன் பங்குடாவெளி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய விவசாயி ஒருவரைக் கைதுசெய்தனர்.
சா. நடனசபேசன்
