பாகிஸ்தானில் ரயில் தற்கொலை தாக்குதலில் 24 பேர் பலி!

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் இராணுவ வீரர்கள் உள்பட 24 பேர் பலியாகினர்.

பாகிஸ்தான் குவெட்டா பகுதியில் உள்ள சமன் படக் ரயில் தண்டவாளம் அருகே இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் குறிவைத்து வாகனத்தைக் கொண்டு இன்று தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் இராணுவ வீரர்கள் உள்பட 24 பேர் பலியாகினர். மேலும் 50இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.