‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய நிகழ்ச்சியின் கிழக்கு மாகாண பிரதான வைபவம் ஜனாதிபதி தலைமையில் இன்று மே 20 மட்டக்களப்பில் நடைபெற்றது.
ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு கட்டமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் ‘வளர்ச்சியே இலக்கு மக்களுக்காக ஒன்றிணைந்து நாட்டை உருவாக்குவோம்’ எனும் திட்டத்தின் கீழ் பாரிய அபிவிருத்தி பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதை அடுத்து ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயல்திட்ட நிகழ்வு
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது
‘போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம்’ எனும் சத்தியப் பிரமாண நிகழ்வும் கிழக்கு மாகாணத்தில் சிறப்பாக பணியாற்றிய 52 போலீசார் கௌரவிப்பும் நடைபெற்றது.
பொலிஸாருக்கு பரிசுகள் வழங்கி ஜனாதிபதி கௌரவித்தார்.
இந்நிகழ்விற்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ன சேர, அமைச்சர் சுனில் ஹந்துன் நெத்தி, பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு,- எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஆதம்பாவா,போலீஸ் மா அதிபர், மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் முதலானோர் கலந்துகொண்டனர்.
எஸ். வரதராஜன்
