போர் எந்த நேரத்திலும் மீள ஆரம்பமாகலாம் - ஈரான்

அமெரிக்காவுடனான சண்டை எந்நேரத்திலும் மீள ஆரம்பிக்கப்படலாம் என்று ஈரானிய படையினர் அறிவித்துள்ளனர்.

அமெரிக்கா எந்த ஓர் உடன்பாட்டுக்கும் வருவதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள ஈரானிய படைத் தலைமை, போருக்கான சகல முன்னாயத்தங்களுடன் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

ஆனால், இதற்கு அமெரிக்கத் தரப்பில் உடனடியான பதில் அளிக்கப்படவில்லை.

ஈரானின் முன்மொழிவுகளை ஏற்க முடியாமலிருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.