75 ஆவது தோழமை தினத்தை முன்னிட்டு பத்மநாபா அறிவாற்றல் கழகம் நடத்தும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்- 2026 நிகழ்ச்சி மட்டக்களப்பு கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் நேற்று (22) மாலை நடைபெற்றது
நிகழ்ச்சிக்குப் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டு, மண் முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு உட்பட்ட பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 75 வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கினார்.
மட்டு மா நகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜெயன், சபையின் உறுப்பினர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பத்மநாபா அறிவாற்றல் கழகத்தின் உறுப்பினர்கள் எனப் பலரும் இவ் வைபவத்தில் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு எஸ்.வரதராஜன்



