புதிய அதிபராக நியமனம்

ஆசிரிய பயிற்சியைப் பெறுகின்ற பயிலுநர் ஆசிரியர்களின் மாதாந்தக் கொடுப்பனவை 20,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிற்துள்ளார்.

இந்த அதிகரிப்பானது 2027 ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் ரூ. 10,500 இலிருந்து ரூ. 20,000 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது அவர்களின் ஆசிரியர் பயிற்திக் காலத்திற்குள் வழங்கப்படுகின்ற நிதி ஒத்துழைப்பாகவும் அதேபோன்று எமது கல்வி முறையும் எதிர்கால பொறுப்புக்களை பொறுப்பேற்பதற்கு அவர்களை தயார்படுத்துவதற்கு உதவியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவியாக அவர்களது கல்வித் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு பிக்கு மாணவர்களுக்காக வழங்கப்படுகின்ற நாளாந்தக் கொடுப்பனவு 2027 ஏப்ரல் மாதத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் ரூ. 15 இலிருந்து ரூ. 50 வரை அதிகரிக்கப்படவுள்ளது.

பிக்கு அல்லாத மாணவர்களுக்காக வழங்கப்படுகின்ற நாளாந்தக் கொடுப்பனவு ரூ. 5 இலிருந்து ரூ. 25 வரையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

அதேநேரம் மதிப்புமிக்க தார்மீகமான குணநலன்களைக் கொண்ட சிறுவர் பரம்பரையொன்றை உருவாக்கும் பொருட்டு அறநெறி பாடசாலைக் கல்வியின் தரத்தைப் பாதுகாக்கும் வகையில் தன்னார்வத்துடன் பங்களிப்புச் செய்கின்ற அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற வருடாந்தக் கொடுப்பனவை 2027 ஆம் ஆண்டிலிருந்து ரூ. 7,500 இலிருந்து ரூ. 12,500 வரை ரூ. 5,000 இனால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பொன்றாக பெற்றுத் தரப்படுகின்ற பாடசாலை சீருடைகளை எதிர்வரும் வருடத்திலும் அவ்வாறே பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்த சில வருடங்களுக்கும் இவ் அன்பளிப்பைப் பெற்றுத்தருவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

உயர் தர மாணவர்களுக்காக பங்குச் சந்தை முதலீடு

க.பொ.த. உயர்தர மாணவர்களைப் பங்குச் சந்தையில் பங்குபற்றச் செய்வதற்காக புதிய முதலீட்டு திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் 2027 வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக 10,000 ரூபாய் முதலீட்டு வரம்புடன் கூடிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி சீர்திருத்தம் அடுத்த ஆண்டில் கட்டாயம் அமுலாகும்

தரம் 2 மற்றும் 6 ஆம் ஆண்டுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் 2027 வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு எவர் எதிர்ப்புத் தெரிவித்தாலும் கட்டாயமாக புதிய கல்வி சீர்திருத்தம் அடுத்த ஆண்டில் நடைமுறையாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும பயனாளிகளுக்கு தொழில் வழங்கினால் சமூர்த்தியூடாக கடன்

கிராமிய தொழில்முயற்சிகளை வலுவூட்டுவதற்கும் அஸ்வெசும பயனாளிகளை வலுவூட்டுவதையும் நோக்கமாகக் கொண்டு, தொழில்முயற்சியாளர்களுக்கு சமூர்த்தி வங்கி ஊடாக உயர்ந்த பட்சம் ரூ. 5 மில்லியன் வரை கடன் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த கடனை 4% வருடாந்த வட்டி வீதத்தின் கீழ் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்குத் தகைமை பெறுவதற்கு குறித்த தொழில் முயற்சியாளர்கள் குறைந்தபட்சம் 5 அஸ்வெசும பயனாளிகளுக்கேனும் வேலைவாய்ப்புச் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுத்தல் கட்டாயமாகும்.

இதற்காக வட்டி நிவாரணத்திற்காக ரூ. 200 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இதன் மூலம் 5,000 மில்லியன் ரூபாய் கடன் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் 100 மில்லியன் ரூபாய்

சர்வதேச போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்காக பாராட்டுப் பரிசுக் கொடுப்பனவாக 100 மில்லியன் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் 2027 வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய ஒலிம்பிக் மற்றும் உலக மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு தலா 100 மில்லியன் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.

அதேநேரம் பொதுநலவாயப் போட்டிகளில் தங்கப் பதக்கத்திற்காக 75 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

ஆசியத் தங்கப் பதக்கத்திற்காக ரூபாய் 50 மில்லியன்னும், சார்க் (SAARC) தங்கப் பதக்கத்திற்காக 15 மில்லியன் ரூபாய் வீதமும் வழங்கப்படும்.

அதற்கு அமைவான முறையில் அத்தொடர்களில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் மற்றும் ஏனைய சர்வதேச போட்டிகளுக்காகவும் பாராட்டுப் பரிசுக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.