மட்டக்களப்பில் தீபத் திருநாளை ஒட்டி ஆலயங்களில் விசேட வழிபாடுகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தீபத் திருநாளையொட்டி ஆலயங்களில் தீபங்கள் ஏற்றி விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான மட்டக்களப்பு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் அடியார்களின் அரோகரா கோசத்துக்கு மத்தியில் ஆலய பிரதம குரு சபரீஸ்வர சைதன்ய குருக்கள் தலைமையில் தீபத்திருநாள் பூசைகள் பக்திப் பூர்வமாக இடம் பெற்றன.

பக்த அடியார்கள் தீபாவளித் திருநாளையொடடி ஆலயத்தில் நெய்விளக்குத் தீபங்களை ஏற்றி நாள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

விசேட தீபாவளி திருநாள் வழிபாடுகளையொட்டி ஆலயம் அலங்கரிக்கப்பட்டதுடன் வழிபாடுகளில் ஈடுபட்டவர்கள் ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

எஸ்.வரதராஜன்