பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்பற்றி செயலமர்வு

பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கானசெயலமர்வு இன்று (07)மட்டக்களப்பில் நடைபெற்றது.

மாற்றுக் கொள்கைகளுக்கான மையம், சமூக ஊடக வெளிப்பாட்டிற்கான கூட்டமைப்பு ஆகியன இணைந்து இந்தச் செயலமர்வை ஏற்பாடுசெய்திருந்தன.

கிழக்கு மாகாண ஊடகவியலளார் ஒன்றியத்தின் எல்.தேவஅதிரன் செயலமர்வை ஒருங்கிணைத்திருந்தார்.

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம், மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் அதன் தாக்கங்கள் தொடர்பிலான தெளிவான விளக்கங்களையும் வழங்கும் வகையில் செயலமர்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் முன்னாள் தலைவர் சம்பத் சமரக்கோன் தலைமை தாங்கி நடத்தினார்.சிரேஷ்ட சட்டத்தரணி தம்மிக்க சில்வா சட்டமூலங்கள் தொடர்பான விரிவான விளக்கங்களை வழங்கினார்.

இந்தச் செயலமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி சிறிநாத்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் ஆகியோர் கலந்து கொண்டதுடன், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

அரசினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் , பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சட்டமூலங்கள்,ஒருங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவை குறித்த விழிப்புணர்வு,தெளிவுபடுத்தும் வகையிலான கருத்து பகிர்வுகள் நடைபெற்றன.

எஸ். வரதராஜன்