முரசு புயல் ஆந்திரா நோக்கி நகர்வு: இலங்கையில் இடியுடன் மழை!

வங்​கக் கடலில் நிலை கொண்​டுள்ள ‘முரசு’ புயல், தீவிர புய​லாக வலுப்​பெற்று இன்று நள்​ளிர​வில் ஆந்​திர கடலோரப் பகுதி​யில் கரையை கடக்​கும்.

அப்​போது அதி​கபட்​ச​மாக மணிக்கு 120 கி.மீ. வேகத்​தில் சூறாவளிக்​காற்று வீசக்​கூடும். இதன் காரண​மாக சென்னை, திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு:

தென்​கிழக்கு வங்​கக்​கடல் மற்​றும் அதனை ஒட்​டிய அந்​த​மான் நிகோபார் தீவு​கள் மற்​றும் அந்​த​மான் கடல் பகுதி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்​றழுத்த தாழ்வு மண்​டலமாக வலுப்​பெற்​றது. இது பின்​னர் மேலும் வலு​வடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று புய​லாக மாறியது.

இந்த புயலுக்கு முரசு என்று பெயரிடப்​பட்​டுள்​ளது. இது மேலும் வலுப்​பெற்று தீவிர புய​லாக மாறக்கூடும். மேற்கு அல்​லது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்​திரப் பிரதேச கடலோரப் பகுதி​களுக்கு அரு​கில் நெல்​லூர் மற்​றும் நரசாப்​பூர் இடையே இன்று நள்​ளிரவு அல்​லது நாளை அதி​காலை கரையை கடக்​கக்​கூடும்.

இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று (நவ.2) சென்னை மற்​றும் திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்​தில்) கூடிய கனமழை பெய்​யக்​கூடும். செங்​கல்​பட்டு, காஞ்​சிபுரம், ராணிப்​பேட்டை, வேலூர் மற்​றும் நீல​கிரி மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும்.