தேசிய மக்கள் சக்தியின் (NPP) நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி காலம் சென்ற லால் விஜேநாயக்காவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கண்டியில் அன்னாரின் இல்லத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை(01) சென்று ஜனாதிபதி இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்.
