கடவத்தை, மஹகடைச் சந்தியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளான்.
இன்று (31) மாலை மஹகடை சந்திப் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் போக்குவரத்துக் கடமைகளில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் சென்ற முச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்துமாறு கட்டளையிட்டுள்ளனர்.
எனினும், பொலிஸாரின் சமிக்ஞையை மீறி முச்சக்கர வண்டி தொடர்ந்து சென்றுள்ளது.அப்போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் வண்டியில் பயணித்த 16 வயதுடைய சிறுவன் காயமடைந்துள்ளான்.அவனது முதுகுப் பகுதியில் இரண்டு துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்துள்ளதாகவும் கவலைக்கிடமான நிலையில் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மேலும் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
