நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை வழங்கப்படுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் க.பொ.த (சாதாரண தர) பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் முன்னர் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை
வங்கக் கடலில் ஏற்பட்டு வரும் சூறாவளி நிலைமை தீவிரமடைந்து வருவதால், இலங்கைக்குப் பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படாது.
எனினும், பல மாகாணங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை செய்துள்ளது. இதனால், ஏற்கனவே முன்பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
