October 20, 2026 2:52 pm
பேராசிரியர் பீரிஸ் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம்

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலஞ்சம்,ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சுமார் இரண்டு மணித்தியாலம் வாக்குமூலப் பதிவின் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே, முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று (20) காலை ஆணைக்குழுவில் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.