கலகொட அத்தே ஞானசார தேரர் விடயத்தில் ஜனாதிபதி சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கண்டியில் மல்வத்தை, அஸ்கிரியா பீடங்களுக்குச் சென்றபோது பிரதமர் இந்தக் கருத்தை நேற்று (15) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி எப்போதும் சரியான முடிவை எடுப்பவர்.நீதிமன்ற விவகாரம் சம்பந்தப்பட்ட இந்த விடயத்திலும் சரியான முடிவை அவர் எடுப்பார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
