2027 ஆம் கல்வி ஆண்டுக்காக நாட்டிலுள்ள 15 லட்சம் பாடசாலை மாணவர்களுக்குத் தலா 6,000 ரூபாய் வீதம் கற்றல் உபகரணக் கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
‘அஸ்வெசுமை’ நலன்புரித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 10 லட்சம் மாணவர்களுக்கான நிதி, நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படும்.
கல்வி, உயர்கல்வி,தொழிற்கல்வி அமைச்சினால் அடையாளம் காணப்பட்டுள்ள மேலும் 5 லட்சம் மாணவர்களுக்குத் தலா 6,000 ரூபாய் பெறுமதியான வவுச்சர்கள் (Vouchers) வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
பாடசாலை உபகரணக் கொடுப்பனவு வழங்கும் இந்த் திட்டம் 2025 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 2027 ஆம் ஆண்டிற்காகவும் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி, அமைச்சரவைக்குத் தெரிவித்துள்ளார்.
