நுவரெலியா பிரதேச சபையின் 2027 வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!

தேசிய மக்கள் சக்தி,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைத்துள்ள நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட 22 உறுப்பினர்களினதும் ஆதரவுடன் இன்று (13) நிறைவேற்றப்பட்டது.

சபைத் தலைவர் வேலு யோகராஜ் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு, ஆளும் தரப்பு,எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

சுமார் 34 கோடி ரூபாய் செலவில் எதிர்வரும் ஆண்டில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் தெரிவித்தார்.

கௌசல்யா