அஹுங்கல்லை, வெலிக்கந்தை பகுதியில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்த சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பாக அஹுங்கல்லை பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியிருந்த நிலையில், நேற்று (07) மாலை சந்தேகநபர் வெலிகந்தைப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவரது வீட்டில் புதைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்றை விசாரணை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
அவர் வெலிகந்த பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞராவார்.
சம்பவம் தொடர்பாக அஹுங்கல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
