சிங்கப்பூர் சென்றிருந்த ஷிரந்தி ராஜபக்‌ஷ நாடு திரும்பினார்வை

சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, நாடு நேற்றிரவு (05) திரும்பியுள்ளார்.

மருத்துவ சிகிச்சைகளுக்காக ஷிராந்தி ராஜபக்ஷ கடந்த செப்டம்பர் 18 ஆம் திகதி சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.

தான் நாடு திரும்பும்போது கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்பிணை மனுவொன்றை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

“சிரிலிய சவிய” கணக்கு தொடர்பான விசாரணை ஒன்றிலேயே தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியே, இந்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.