பேராதனை - கொழும்பு ரயில் கங்கொடையில் தடம்புரள்வு

பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் இன்று (05) தடம்புரண்டது. கங்கொடை- கடிகமுவை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம் புரண்டுள்ளது.

ரயில் பாதையில் மண்ணும் கற்களும் சரிந்து விழுந்ததால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.