அஹுங்கல்லை அஹுங்கல்லை கொலைச் சந்தேக நபர் கைது!

அஹுங்கல்லை, கல்வெஹெர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 74 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (4) அதிகாலை இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கி ஒன்று கல்வெஹெர பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.