அஹுங்கல்லை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!

அஹுங்கல்லை கல்வெஹரை பகுதியில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளளது.

இதில் 74 வயது நபர் காயமடைந்து பலப்பிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் அஹுங்கல்லை, கல்வெஹெரை பகுதியைச் சேர்ந்தவராவார்.

கைத்துப்பாக்கியைப் (பிஸ்டல்) பயன்படுத்தி சூடு நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வீட்டின் ஜன்னல் வழியாகத் துப்பாக்கியை நீட்டி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக அஹுங்கல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.