கொக்குவிலில் சர்வதேச சிறுவர் முதியோர் தின நிகழ்ச்சி

கொக்குவில் முதலி இளைஞர் கழகமும் கொக்குவில் மத்திமேற்கு இளைஞர் கழகமும் இணைந்து நடத்திய சர்வதேச சிறுவர் முதியோர் தின நிகழ்ச்சி 01/10/2026 வியாழக்கிழமை யாழ்ப்பாணம் கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய திருமண மண்டபத்தில் ந. தவநேசன் (கிராம சேவை அதிகாரி -J/124) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ந. தயாளன் (அதிபர் – யாழ் கோண்டாவில் இந்துக்கல்லுாரி ) அவர்களும் சிறப்பு விருந்தினராக தி.சந்திரகாசன் – (சமுர்த்தித் தலைமைப் பீட முகாமையாளர் பிரதேச செயலகம் நல்லூர் ) அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கா. சுதாகரன் (தலைவர் – கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய தர்மகர்த்தா சபை), செல்வி ச.பாலாம்பிகை (ஆசிரியர்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்