பிளைதுபாய் சிஈஓ படம்:நியுஸ்வயர்
பிளைதுபாய் விமானத்தில் நடந்த சம்பவத்தை உறுதிப்படுத்தி அந்த விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (சிஈஓ) உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி விமானி அறையில் நடந்த சம்பவத்தையடுத்துப் பயணிகளும் விமானச் சிப்பந்திகளும் பாதுகாப்பாக இருப்பதாக பிளைதுபாய் சிஈஓ உறுதிப்படுத்தியுள்ளதாக ‘நியுஸ்வயர்’ செய்தி வௌியிட்டுள்ளது.
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட FZ 1073 விமானத்தின் விமானி அறையில் நடந்த சம்பவத்தின்போது விமானிக்கு உதவிய பயணிகள், விமானிகள், விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்க உதவிய சவூதி அரேபிய, ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகள் ஆகியோருக்கு அவர் பிளைதுபாய் சிஈஓ அல் கைத் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெறுவதால், மேலதிகத் தகவல் எதனையும் வெளியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தச் சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருப்பதால், உத்தியோகபூர்வ விசாரணை தமது நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நடைபெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
